2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

குற்றச்செயல்களில் ஈடுபடாத முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பொலிஸாரின் பரிசுத் திட்டம்

Super User   / 2010 ஒக்டோபர் 17 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி விபத்துக்கள் உட்பட எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடாத முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் விசேட பரிசுத் திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரட்ன தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி, நாவற்குடா, காத்தான்குடி, ஆரையம்பதி ஆகிய பொலிஸ் பரிவிற்குள் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளின் சாரதிகளுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் 350 முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .