2021 மார்ச் 01, திங்கட்கிழமை

கோயில் உண்டியல் பணம் கொள்ளை; உதயபுரத்தில் நள்ளிரவில் சம்பவம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லோஹித்)

மட்டக்களப்பு, பெரிய கல்லாறு, உதயபுரம் ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தினுள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஆலயத்தின் கூரை ஓடுகளைக் களற்றி அதனூடாக உள்ளே நுழைந்த சிலர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆலயத்தின் வருடாந்த திருவிழா நிறைவடைந்து சில தினங்களே ஆன நிலையில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த நிருவாகத்தினர், கடந்த வருடம் திருவிழா நிறைவுற்று ஒரு வார காலத்திலேயே தாம் உண்டியலில் இருந்த உற்சவகால பணத்தினை எடுத்ததாகவும் அது போன்று இவ்வருவமும் எண்ணியிருந்த நிலையிடநுலநு இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத்  தெரிவித்தனர்.

இவ்வுண்டியல் திருட்டு தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரிய கல்லாறு, உதயபுரம் ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலயத் திருவிழா கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து புதன்கிழமை நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .