2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மண்முனை - கொக்கட்டிச்சோலை வாவியூடாக பாலம் அமைக்க கோரிக்கை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

100 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் மண்முனை - கொக்கட்டிச்சோலை வாவியூடான படகுப்பாதைக்குப் பதிலாக குறித்த நீர்வழியூடாக பாலம் அமைத்து தருமாறு அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுமார் 1 கிலோமீற்றர் நீளமுள்ள இந்த நீர் வழிப்பாதையூடாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் அரச ஊழியர்களும் படகுப் பாதையுடாகவே பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பயணம் செய்து வருகின்றனர்.

இவ்வழியூடாக பாலம் அமைப்பதற்கு பல அரசியல்வாதிகள் பலமுறை அடிக்கல் நாட்டியுள்ள போதிலும் கடந்த பல தசாப்தங்களாக பாலம் அமைக்கப்படவில்லை என்றும் கிழக்கின் உதயம் திட்டத்தினூடாகவேனும் படகுப்பாதைக்குப் பதிலாக பாலம் அமைத்து தருமாறு மக்கள் அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .