2020 நவம்பர் 25, புதன்கிழமை

உள்ளூராட்சிமன்றங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் செயலமர்வு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 21 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி )

உள்ளூராட்சிமன்றங்கள் தொடர்பாகவும் அதன் செயற்பாடுகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.


எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்செயலமர்வில் எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் கல்லாறு தேற்றாத்தீவு, களுதாவலை ஆகிய பிரதேசங்களிலுள்ள சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 150 பேர் கலந்து கொண்டனர்.
எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் சமூக ஒழுக்க வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் வி.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக புனர்வாழ்வு திட்ட பணிப்பாளர் தயாபரன் விரிவுரைகளை நிகழ்த்தினார் என எகெட் நிறுவனத்தின் ஊடக இணைப்பாளர் மைக்கல் தெரிவித்தார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .