A.P.Mathan / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு திமிலைத்தீவு ஐக்கிய நட்புறவாளர் ஒன்றியமும் சமாதான விளையாட்டுக் கழகமும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை அந்த பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தன.
டெங்கு ஒழிப்பு தொடர்பாக புதுநகர், சேற்றுக்குடா, திமிலைத்தீவு மற்றும் வீச்சுக்கல்முனை ஆகிய கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் இது தொடர்பான பேரணியும் கருத்தரங்கும் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம், மாநகரசபை உறுப்பினர் கே.கிருபைராஜா ஆகியோருடன் சுகாதார சேவைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


43 minute ago
52 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
52 minute ago
58 minute ago