2020 நவம்பர் 28, சனிக்கிழமை

பஸ்வண்டி எரிந்து நாசம்

Super User   / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான், சிஹாராலத்தீப்)

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் 30 லட்சம் ரூபா பெறுமதியான பஸ்வண்டியொன்று நேற்றிரவு எரிந்து சாம்பராகியதாக புகாரிடப்பட்டுள்ளது.

குறித்த கிறிஸ்தவ போதகர் வயோதிபர் இல்லம் ஒன்றினை அமைத்து வரும் காணியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்வண்டி நேற்றிரவு 7.30 மணியளவில் இனம் தெரியாதோரால் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரிடம் புகாரிடப்பட்டுள்ளது.

பெந்தகோஸ்தே சபையின் சின்ன ஊறணிக்கிளையின் போதகரும் சுவிசேச சபை உபதலைவருமான கணபதிப்பிள்ளை தெய்வேந்திரன் என்பவரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெருமளவு பாகங்கள் எரியுண்ட நிலையில் காணப்படும் இந்த பஸ் எரிப்பு சம்பந்தமாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்னவின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர் . இந்த மினிபஸ் வண்டி கொள்வனவு செய்து 2 மாதங்களே ஆகின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.


 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--