2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

பிரதமரின் மட்டு விஜயம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் குறித்து ஆராய்வு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

பிரதமர் தி.மு.ஜயரட்ன மட்டக்களப்புக்கு எதிர்வரும் 4ஆம் திகதி வருகைதரும் நிகழ்ச்சி நிரல் குறித்து ஆராயும் கூட்டமொன்று இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் பிரதமரின் இணைப்புச் செயலாளர் தர்மதாச ஹேரத், கிழக்கு மாகாண ஆளுனரின் செயலாளர் உடகே மட்டக்களப்ப மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் உட்பட சர்வமத முக்கியஸ்த்தர்கள் பிரதேச செயலாளார்கள் திணைக்களங்களின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் 4ஆம் திகதி மட்டக்களப்புக்கு வருகை தரும் பிரதம மந்திரி அன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறும் சர்மத தலைவர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்து கொள்வதுடன் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிலையத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இந்து மத குருக்கள் மற்றும் இந்து மத ஆலயங்களின் நிருவாகிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதையடுத்து அவர் காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பெரிய ஜும் ஆ பள்ளிவாயலுக்கு சென்று அங்கு உலமாக்கள் மற்றும் பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர்கள் பள்ளிவாயல் சம்மேளன பிரதி நிதிகளை சந்திப்பதுடன் இதையடுத்து மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு சென்று அங்கு விகாராதிபதி உட்பட பௌத்த சமய தேரோக்களை சந்திப்பதுடன் மட்டக்களப்பு சிசிலியா பாடசாலை மண்டபத்தில் கிறிஸ்த்தவ மத தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களின் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினாலும் சுனாமியினாலும் சேதமடைந்த மத வழிபாட்டுத்தளங்களை புனரமைப்பது குறித்து பிரதமரின் தலைமையில் இதன் போது கலந்துரையாடப்படுமென இக்கூட்டத்தில் தீர்மானித்ததாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--