2020 நவம்பர் 28, சனிக்கிழமை

வழமைக்கு திரும்பிய கொழும்பு - மட்டு புகையிரத சேவை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

வெலிகந்தையில் புகையிரதமொன்று தடம் புரண்டதையடுத்து தடைப்பட்டிருந்த மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்குமிடையிலான புகையிரதசேவை இன்று நண்பகல் 12 மணியுடன் வழமைக்குத்திரும்பியுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மேற்படி புகையிரதம் தடம்புரண்டதையடுத்து கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த இரவு கடுகதி புகையிரதம் அதிகாலை 4.15 மணிக்கு வந்தடையவேண்டிய நிலையில் நண்பகல் 11.45 மணிக்கே மட்டக்களப்பை வந்தடைந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு மட்டக்களப்பு இரவு புகையிரத சேவை உட்பட அனைத்து சேவைகளும் வழமைபோன்று இடம்பெறுமென அவர் மேலும் தெரிவி;த்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--