Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சிஹாரா லத்தீப்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசங்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பழப்பயிர்களை உற்பத்தி செய்வதில் விவசாயிகளை ஊக்குவிக்க விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதற்கமைய 'நாம் பயிரிடுவோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்' எனும் திட்டத்திற்கமைய புதிய வாழை இனமான கனன்டிஸ் மற்றும் பப்பாசி இனமான ரெட்லேடி பயிர் வகைகளை உற்பத்தி செய்வதற்கு வசதியாக பப்பாசி பழமர விதைகளையும், வாழை மர குட்டிகளையும் விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்கவும் தேவையான நீர்ப்பாசன வசதி மற்றும் உள்ளீடுகளை இலகுவாக பெற்றுக்கொள்ள வசதி செய்வதற்கும் விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவுத் தகவல் தெரிவிக்கின்றது.
இதற்கமைய குறித்த புதுவித வாழை, பப்பாசி இனங்களை விவசாய திணைக்களம் இம்மாவட்டத்தில் மீள் குடியேற்ற பகுதியான உன்னிச்சை பகுதியில் பரீச்சாத்தமாக செய்திருந்த போது இத்திட்டம் பூரண வெற்றியைத் தந்ததைத் தொடர்ந்து இம்மாவட்டத்தில் பழப்பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க தமது திணைக்களம் ஏற்பாடுகளை செய்து வருவதாக விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு பணிப்பாளர் இரா.கரிகரன் தெரிவித்தார்.
பரீட்சாத்தமாக செய்யப்பட்ட பழப்பயிர்ச் செய்கையின் உத்தியேதக பூர்வ அறுவடைவிழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ்.மோகனராஜா, உதவி கமநல அபிவிருத்தி ஆணையாளர் டாக்கடர்.ஆர்.ருசாந்தன், மட்டக்களப்பு மத்திய வலய உதவி விவசாய பணிப்பாளர் ம.சிவஞானம், விவசாய போதனாசிரியர் தே.கோசலரூபன் உட்பட பலர் பிரசன்னமாயிருந்தனர்.
4 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago