Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)
கிழக்கிலங்கை கிறிஸ்தவ வாழ்வு சமூகங்களின் வருடாந்த மாநாடு, கல்முனை இருதய ஆண்டவர் மண்டபத்தில் நேற்று முன்தினம் வரை மூன்று தினங்கள் நடைபெற்றது.
அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமலை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிமேதகு ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும்இ கௌரவ அதிதியாக சிவில் மேல் முறையீட்டு நீதிபதி (மட்ஃகல்) பாலசிங்கம் சசிமகேந்திரன்இ சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு கல்முனை கரித்தாஸ் எகெட் நிறுவக இயக்குனர் அருட்பணி. பேராசிரியர் சில்வெஸ்ரர்இ கல்முனை மறைக்கோட்ட குரு முதல்வர் அருட்பணி. ஜூட் ஜோன்சன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு புனித இஞ்ஞாசியாரின் இந்நிகழ்வு பிராந்திய கிறிஸ்தவ கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஆன்மீக உதவியாளர் அருட்தந்தை. ஆஞ்சலோ பொன்னையா அவர்களினால் வழிநடத்தப்பட்டது.
திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை ஆகிய மறைக்கோட்டங்களில் இருந்து சுமார் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள், திருமணமானோர் இம்மாநாட்டில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

2 hours ago
7 hours ago
8 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
8 hours ago
17 Jan 2026