2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகளை ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவர ஏற்பாடு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

கிழக்கு மாகாணத்திலுள்ள பாலர் பாடசாலைகளை, கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்வி பணியகம் உள்வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.


இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பிலுள்ள பாலர் பாடசாலைகள் அனைத்தையும் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை பணியகத்துடன் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விண்ணப்பப்படிவங்கள் பாலர் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.


காத்தான்குடி கல்விக்கோட்டத்திலுள்ள பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான கூட்டமொன்று இன்று காத்தான்குடியிலுள்ள மீரா பாலர் பாடசாலையில் நடைபெற்றது. இதில் பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் கோபாலகிருஷ்ணன், மற்றும் சிறுவர் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜெமீலுன்னிஸா  அதன் முகாமைத்துவ உதவியாளர்கள் பாலர் பாடசாலை  ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 500 பாலர் பாடசாலைகளை பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதன் பணிப்பாளர் கோபால கிருஷ்ணன் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .