2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளுடன் இரு மீனவர்கள் கைது

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவந்த மீனவர்கள் இருவரை கல்குடா பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கைதுசெய்யதுள்ளதாக மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் டொமினிக் ஜோர்ஜ் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் நாளை வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

தடைசெய்யப்பட்ட சட்டவிரோத வலைகளை வைத்திருப்போர் அவற்றை மாவட்ட கடற்றொழில் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அண்மையில் கேட்கப்பட்டிருந்தது. அவற்றை ஒப்படைக்கும் காலக்கெடு முடிவடைந்த நிலையில், தற்போது பொலிஸாரின் உதவியுடன் சட்டவிரோத வலைகளை வைத்திருப்போர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டொமினிக் ஜோர்ஜ் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--