2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரியில் நியமனம்:மாகாண அமைச்சர் சுபைர்

Super User   / 2010 ஒக்டோபர் 31 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

(எம்.சுக்ரி )

கிழக்கு மாகாணத்திலுள்ள முன் பள்ளி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் நியமனம் வழங்க கிழக்கு மாகாண சபை நடவடிக்கை எடுத்து வருவதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட முன் பள்ளி ஆசிரிய அபிவிருத்தி வலயமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற முன் பள்ளி ஆசிரிய ஆக்கத்திறன் கண்காட்சியின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

அதன் இறுதி வைபவத்தில் உரையாற்றும் போதே மாகாண அமைச்சர் சுபைர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய மாகாண அமைச்சர் சுபைர்,

கிழக்கு மாகாணத்திலுள்ள முன் பள்ளி ஆசிரியர்களை கிழக்கு மாகாண சபையினால் உள்வாங்கி அவர்களுக்கு மாதாந்தம் சம்பளம் வழங்க கிழக்கு மாகாண சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் இதில் கூடிய கவனம் எடுத்து வருகின்றார். இதற்காக கிழக்கு மாகாண சபை தொடங்கியவுடன் முதலாவதாக பாலர் பாடசாலை சட்ட மூலம் இயற்றப்பட்டு அது  நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே  தற்போது கிழக்கு மாகாண சபையினால் நிறுவப்பட்டுள்ள பாலர் பாடசாலை பணியகத்தினால் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய  பிரதியமைச்சர் முரளிதரன்,

கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் பேசுவதற்காக கிழக்கு மாகாணத்தலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களை ஜனாதிபதியுடன் சந்திக்க ஏற்பாடுகளை மேற்கொண்டு தருவேன் என தெரிவித்தார்.

அதிதிகள் கண்காட்சியையும் பார்வையிட்டனர். இதன் போது கண்காட்சியில் பங்கு பற்றிய முன் பள்ளி ஆசிரியைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--