Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 நவம்பர் 01 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சிஹாறா லத்தீப்)
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்ட மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், உன்னிச்சை மீள் குடியேற்ற கிராமத்தின் புனர்வாழ்வுத் திட்டங்கள் பலவற்றை ஆரம்பித்து வைத்தார்.
யுத்த சூழ்நிலை காரணமாக உன்னிச்சைப் பிரதேசத்தில் சேதமான 196 வீடுகள், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் சுமார் 60 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு இன்று இப்பிரதேச மக்களிடம் மத்திய வங்கி ஆளுநரினால் கையளிக்கப்பட்டன.
இது தவிர யுத்த சூழலில் தொழில் வாய்ப்புக்களை இழந்த மீனவர் குடும்பங்களுக்கும் மீன்பிடி தோணிகளும், வலைகளும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
விவசாயிகள் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தி தொழிலுக்கு உதவிகளும் வழங்கப்பட்டதுடன் வறிய மாணவர்களுக்கான இலவச பாடசாலை உபகரணங்களும் மற்றும் இப்பிரதேச மக்களுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஆரம்பிப்பதற்கு கடனுதவிகளும் மத்திய வங்கி ஆளுனர் அஜித் கப்ராலினால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் டபிள்யு.எம்.கருணாரத்ன உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
01 Jul 2025