2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

மட்டு. பிரதேச செயலகங்களுக்கு ஐ.நா.வினால் தளபாடங்கள் கையளிப்பு

Super User   / 2010 நவம்பர் 01 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மக்கள் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள 6 பிரதேச செயலகங்களுக்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலுவலகத் தளபாடங்கள் இன்று மாலை வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தின் போது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட அதிகாரி எஸ்.பிரஸாந்தினி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தளபாடங்களை கையளித்தார்.

வாகரை, கொக்கடிச்சோலை, வெல்லாவெளி, வவுணதீவு, கிரான், செங்கலடி ஆகிய பிரதேச செயலாளர்களிடம் உபகரணங்கள் ஒப்படைக்கப்பட்டன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .