2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் விழிப்புனர்வற்றோர் தொழில் பயிற்சி நிலையம் அமைக்க யோசனை

Menaka Mookandi   / 2010 நவம்பர் 02 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஆர்.அனுருத்தன்)
 
தமிழ் மொழி மூல விழிப்புலனற்றறோர் தொழிற் பயிற்சி நிலையமொன்று மட்டக்களப்பில் அமைப்பது குறித்து சமூக சேவைகள் அமைச்சிடம் தான் கோரிக்கையொன்றை முன்வைக்கப் போவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.
 
நேற்று திங்கள் கிழமை மாலை மட்டக்களப்பு 'தரிசனம் ' விழிப்புலனற்றோர் பாடசாலையில் நடபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை அதிபர் ஆ.ஜீவராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின்  தேவைகள் குறித்து நிர்வாகத்திடம் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்து கொண்டார்.
 
இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, 'சிங்கள மொழி மூலம் விழிப்புலனற்றோருக்கான  தொழிற் பயிற்சி பாடசாலை ஏற்கனவே சீதுவையில் உள்ளது.ஆனால் தமிழ் மொழி மூல  விழிப்புலனற்றோர் பாடசாலை இல்லை.

2000 - 2001 ம் ஆண்டு காலப் பகுதுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்த காலத்தில் இதற்கான முயற்சி மேற் கொள்ளப்பட்டு மட்டக்களப்பில் அதற்கான காணி அடையாளம் காணப்பட்ட போதிலும்இநாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக அம்முயற்சி பலனளிக்காமல் போனது.' என கூறிய அவர்  அம் முயற்சியை மீண்டும் தொடரப் போவதாகவும் குறிப்பிட்டார்.
 
இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகருடன் தொடர்பு கொண்டு விழிப்புலனற்றோருக்கான கனனி பயிற்சிக் கூடம் அமைத்தல்இ பஸ் வண்டி  மற்றும் இசைக் கருவிகள் தொகுதியை பெற்றுக்கொள்ளல் போன்றன குறித்தும் தான் கவனம் செலுத்த இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--