2020 நவம்பர் 25, புதன்கிழமை

காத்தான்குடியில் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் கையளிப்பு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 02 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம.சுக்ரி)

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சினால் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் தையல் பயிற்சியை முடித்தவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் அவர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் முஸம்மில் தலைமையில் இவ்வைபவம் நடைபெற்றது.

இவ்வைபவத்தில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, அமைச்சின் செயலலாளர் திருமதி நாமினி குணசேகர மற்றும் மேலதிக செயலாளர் திருமதி அசோகா அலவத்துகொட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிக்வில் நடாத்தப்பட்ட பெண்களுக்கான தையல் பயிற்சியை முடித்தவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் அவர்களுக்கான தையல் இயந்திரங்கள் என்பன 25பேருக்கு வழங்கப்பட்டதுடன் சுய தொழிலுக்கான நிதியுதவி மூன்று பேருக்கும் வழங்கப்பட்டன. இவ்வைபவத்தில் அரச காணிகளிலிருந்த 20பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .