2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை

Super User   / 2010 நவம்பர் 03 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சிஹாறா லத்தீப்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை உற்பத்தியில் ஈடுபடும் கால்நடை பண்ணையாளர்களை ஊக்குவிக்க கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

மாகாண அமைச்சர் துரையப்பா நவரெட்ணராஜாவின் வழிகாட்டுதலுக்கமைய இந்தப் பண்ணையாளர் ஊக்குவிப்புத் திட்டம் மாகாணத்திலுள்ள சகல கால்நடை வைத்திய பிரிவுகளில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்திற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை வைத்திய பிரிவுகள் தோறும் ஆடு, மாடு, கோழி வளர்ப்பிலீடுபட்டு வரும் சிறந்த பண்ணையாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பணப்பரிசில் வழங்கப்படுவதுடன் கால்நடை உற்பத்திற்கான உபகரணங்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டு வருவதுடன் கால்நடை உற்பத்தியாளர் சங்கங்களுக்கு இலவசமாக கால்நடை வைத்திய மருந்து பொருட்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்திற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கால்நடை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு கல்லடி கால்நடை பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி திருமதி.மல்லிகாதேவி அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாகாண விவசாய கால்நடை உற்பத்தி கிராமிய தொழில்துறை அமைச்சர் நவரெட்ணராஜா ஊக்குவிப்பு உபகரணங்களையும் பணப்பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .