Super User / 2010 நவம்பர் 07 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா நேற்று மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் எல்லைப்புற கிராமங்களுக்கு விஜயம் செய்து மீள்குடியேற்றத்தின் பின்னர் அக்கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நேரில் கேட்டறிந்து கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள திக்கோடை, 38ஆம் குடியேற்றம், 40ஆம் குடியேற்றம், தும்பாளை மற்றும் நவகிரிநகர் ஆகிய கிராமங்களுக்கு இந்த விஜயத்தை மேற்கொண்ட அவர் ஆலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பூசை வழிபாடுகளிலும் கலந்து கொண்டார்.
2006/2007ஆம் ஆண்டு யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட இக்கிராம மக்கள் யானைகளின் தொல்லை காரணமாக எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்து இதற்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த பாராளுமுன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா குறித்த கோரிக்கைகளில் சில கோரிக்கைகளை தனது பன்முகப்படுத்தப்டப்ட வரவு செலவுத்திட்ட நிதியின் மூலம் நிறைவேற்றித் தருவதாகவும் ஏனை கோரிக்கைகளை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வு கான்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.
.jpg)
.jpg)
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026