2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

வாகரை விவசாயிகளுக்கு மானிய உரம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 07 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள விவசாயிகளுக்கு மஹிந்த சிந்தனையின் விவசாயிகளுக்கான மானிய அடிப்படையில் உரங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் வாகரை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்கும் நிகழ்வு ஆலங்குளம் கிராம அபிவிருத்தி செயலகக் கட்டிடத்தில் வைத்து வழங்கப்பட்டன.

ஆலங்குளம், காரமுனை, வெள்ளாமச்சேனை, முள்ளிச்சேனை, வட்டவான், போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இவ்வுரம் வழங்கப்பட்டது.

ஒரு ஏக்கருக்கு மூன்று மூடை உரம் என்ற அடிப்படையில் மூவாயிரம் ஏக்கர் காணிகளுக்கான உரம் இதன்போது விநியோகிக்கப்பட்டதாக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்  வீ.ஜெயகாந்தன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .