2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

கோரளைப்பற்று பிரதேச மக்களுக்கு இலவச அடுப்பு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 07 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் கோறளைப்பற்று, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வரிய மக்களுக்கு அடுப்புகளும் துவிச்சக்கர வண்டிகளும் கையளிக்கப்பட்டன.

கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ளவர்களுக்கு கிண்ணயடி பொது நூலகத்திலும், கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் உள்ளவர்களுக்கும் ஓட்டமாவடி பிரதேச சபைக் கட்டிடத்திலும் வைத்து இவை கையளிக்கப்பட்டன.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ். சஹாப்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர். எம்.எஸ்.சுபைர், கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர், அலி.ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .