2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

மாணவி கடத்தல்;மூவர் கைது

Super User   / 2010 நவம்பர் 07 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

காத்தான்குடி  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனை பிரதேசத்தில் கல்வி பொதுத் தராதர உயர்தர வகுப்பு மாணவியை கடத்திய கும்பலொன்றை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இக்கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும்
பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இக்கடத்தல் சம்பவத்தில் ஆறு பேர் தொடர்புபட்டுள்ள போதிலும் மூவர் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதிவான் நிதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி வீ.இராமகமலன் உத்தரவிட்டுள்ளார். ஏனைய மூவரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி மாணவி காத்தான்குடிக்கு வந்து கொண்டிருந்த போது கல்லடி சிவானந்தா பாடசாலைக்கு முன்னால் வைத்து கடத்தப்பட்டுள்ளார்.

கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்ட மாணவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--