2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

வவுணதீவில் நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2010 நவம்பர் 08 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆதவன்)

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயல்திட்டமானது தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினூடாக வவுணதீவு பிரதேச செயலகத்;தில் நடமாடும் சேவையொன்றை நடத்தியது.

வவுணதீவ பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான சட்ட ஆவணங்களான பிறப்பு, இறப்பு, விவாகச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த நடமாடும் சேவை இன்று திங்கட்கிழமை காலை முதல் நடைபெற்றது.

இதில் உதவிப் பதிவாளர் நாயக கிழக்கு மாகாண காரியாலய உத்தியோகத்தர்கள், வவுணதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், உள்ளுர் பிறப்பு இறப்பு விவாகப்பதிவு உத்தியோகத்தர்கள், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்ட உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X