Menaka Mookandi / 2010 நவம்பர் 09 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஸரீபா)
வாழைச்சேனை அஹமட் வித்தியாலயத்தின் நான்காவது பரிசளிப்பு விழாவும், நூலகத் திறப்பு விழாவும் இன்று காலை பாடசாலை முன்றளில் நடை பெற்றது.
வித்தியாலய அதிபர் ஏ.பி.எம்.ஹைதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகண சபை உறுப்பினர்களான எஸ்.ஜவாஹிர் சாலி மற்றும் எம்.எச்.எஸ்.இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி, பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் கல்குடாத் தொகுதி இணைப்பாளர் என்.எம்.கஸ்ஸாலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு 2009 ம் ஆண்டு மற்றும் 2010ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.


18 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago