2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

செங்கலடியில் வன பூங்கா அமைக்க நடவடிக்கை

Super User   / 2010 நவம்பர் 11 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொடுவாமடு பிரதேசத்தில் வன பூங்கா ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு இந்த வண பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதியின் இரண்டாவது பதிவியேற்பை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் மரம் நாட்டும் பிராதன வைபவம் எதிர்வரும் 15ஆம திகதி மேற்படி பொடுவாமடு பிரதேசத்தில் நடைபெறவுள்ளதாகவும் அரசாங்க அதிபர்  கூறினார்.

ஜனாதிதிபதியின் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 8600 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே ஜம்பதாயிரம் மரக்கன்றுகளை நாட்ட திட்டமிட்டிருந்த போதிலும் தற்போது ஒரு லட்சத்து 8600 மரக்கன்றுகளை நடவுள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

இதேநேரம்  மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இம்மர நடுகை 15ஆம் திகதி காலை இடம்பெறுமென அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தமிழ் மிரருக்கு மேலும் தெரிவித்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .