2025 ஜூலை 02, புதன்கிழமை

மட்டு. மாவட்டத்தின் ஐந்தாவது புதிய கல்வி வலயம் மாகாண ஆளுநரால் அங்குரார்ப்பணம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 12 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்,எம்.சுக்ரி, ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் 5ஆவது கல்வி வலயம் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனால் வைபவரீதியாக  திறந்துவைக்கப்பட்து.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட வவுணதீவு பிரதேசத்திலுள்ள குறிஞ்சாமுனையிலேயே மேற்படி கல்வி வலயம் திறந்துவைக்கப்பட்;டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கெனவே 4 வலயக் கல்வி அலுவலகங்கள் செயற்பட்டு வருகின்றன. உப கல்வி வலயமாக இன்று ஆரம்பமாகியுள்ள இக்கல்வி வலயம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கல்வி வலயமாக பிரகடனப்படுத்தப்படும் என கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.எம்.நிஸாம் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .