Super User / 2010 நவம்பர் 15 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.எஸ்.வதனகுமார், ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி சுனாமி வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே சடலம் மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு உப்போடையை சேர்ந்த மரியநேசன் பிரான்சிஸ்(47வயது)என்ற குடும்பஸ்த்தரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவரை காணவில்லையென நேற்று தமது பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இவரை தேடிவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கடந்த 13ஆம் திகதி மரணமடைந்திருக்கவேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். குடும்பத்தினருடன் ஏற்பட்ட முரண்பாட்டில் இவர் தனியாக சென்றிருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
.jpg)
.jpg)
9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025