2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

மீனவர் சங்கங்களுக்கு மீன்பிடி வலைகள், சைக்கிள்கள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 16 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்,ஸரீபா )

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஜவாஹிர்சாலியின் நிதியொதுக்கீட்டின் கீழ்,  மீராவோடை கில்மியா மீனவர் சங்கம், ஓட்டமாவடி ஸ்ரீலங்கா தொழிலாளர் சங்கம் மற்றும் மாஞ்சோலை பதூரியா மீனவர் சங்கம் போன்றவற்றுக்கான வாழ்வாதார உதவியாக ஒரு தொகுதி மீன்பிடி வலைகளும், சைக்கிள்களும் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கான நிகழ்வு கோரளைப்பற்று பிரதேசசபை மண்டபத்தில் கோரளை மேற்கு உப பிரதேசசபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்றது.

இதில் வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர் தா.உதய ஜீவதாஸ் கலந்துகொண்டு மீனவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .