Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 நவம்பர் 16 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஸரீபா)
கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தினால், மாதாந்த உதவிக் கொடுப்பனவைப் பெறுபவர்களின் சுயதொழிலை ஊக்குவிக்கும் முகமாக நிவாரணக் கொடுப்பனவு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சமூகசேவை பராமரிப்பு நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது.
கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாதாந்த உதவிக் கொடுப்பனவுத் தொகை பெறுகின்றவர்களில் 14 பேருக்கும் சுயதொழில் நிவாரணக் கொடுப்பனவாக தலா இருபதாயிரம் ரூபா வீதம் மேற்படி 14 பேருக்கும் இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் ரூபா வழங்கப்பட்டது.
இக்கொடுப்பனவைப் பெறும் பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்த உதவிக் கொடுப்பனவுத் தொகை ஆறு மாதங்களின் பின் நிறுத்தப்படுவதோடு, இவர்களால் மேற்கொள்ளப்படும் சுயதொழில் தொடர்பாக கோறளைப்பற்று பிரதேச செயலக சமூகசேவைகள் பிரிவு கவனிக்கும் என்று சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.ஜெயசேகர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன், உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு ஆகியோரும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான பணத்தினை வழங்கி வைத்தனர்.
8 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago