Kogilavani / 2010 நவம்பர் 17 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்,எம்.சுக்ரி)
கிழக்கில் மிகவும் அமைதியான முறையில் புனித ஹஜ் பெருநாள் கொண்டாட்டங்கள் இடம் பெற்று வருகின்றன.
புனித ஹஜ் பெருநாளையொட்டிய விசேட தொழுகை காத்தான்குடி கடற்கரை மைதானத்தில் நடைபெற்றது. இதன் போது 5000ற்கும் அதிகமான முஸ்லிம்கள் தொழுகையில் கலந்து கொண்டனர். பெருமளவிலான பெண்களும் இத்தொழுகைகளில் கலந்து கொண்டனர்.
இதேவேளை, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை உட்பட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பள்ளிவாயில்களிலும் விசேட ஹஜ் பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றன. நாட்டில் அமைதியும் , சமாதானமும் நிலைபெற வேண்டி பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
காத்தான்குடி கடற்கரை மைதானத்தில் இன்று காலை இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகையினையும், பெருநாள் குத்பாவினையும் அஷ்ஷெய்க் கலாநிதி யு.எல்.அஹமட் அஷ்ரப் நடத்துவதையும், பெருமளவிலான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருப்பதையும் படங்களில் காணலாம்.



.jpg)
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026