2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி மட்டக்களப்பில் பாரிய யாகமும் பூசை வழிபாடும்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 18 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 65ஆவது பிறந்த தினம் மற்றும் இரண்டாவது பதவியேற்பு வைபவத்இதாயொட்டி மட்டக்களப்பில் இன்று காலை பாரிய யாகமும் பூஷை வழிபாடுகளும் இடம்பெற்றன.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் வழிகாட்டலில் அவரது தலைமையின் கீழ் இயங்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஏற்பாட்டின் பேரிலேயே இந்த ஆசீர்வாத பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எட்வின் கிருஸ்ணானந்தராஜா, பி.பிரசாந்தன் உட்பட பலர் இவ்வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றனர். மட்டக்களப்பு, கல்லடி ஸ்ரீபேச்சியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற யாகத்திலும் வழிபாடுகளிலும் பெருமளவிலானோர் பங்கு கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X