2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

மகா கணபதி ஹோமம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 18 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

இரண்டாவது முறையாக பதவியேற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் தமிழ் பேசும் சமூகத்தின் சுபீட்ஷமான எதிர்காலத்திற்கும் நல்லாசி வேண்டியும் கல்லடி உப்போடை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் மகா கணபதி ஹோமமொன்று நடத்தப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் நெறிப்படுத்தலுடன் இன்று காலை 6.00 மணி தொடக்கம் முற்பகல் 10.00 மணி வரை நடைபெற்ற இந்த மகா கணபதி ஹோமத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான  பூ.பிரசாந்தன், கிருஷ்ணானந்தராஜா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் கைலேஸ்வரராஜா உள்ளிட்ட தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .