Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Super User / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி, ஜிப்ரான்)
தென்னிலங்கையிலுள்ள சர்வமத தலைவர்கள் இன்று மாலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்தனர்.
சமாதானத்திற்கும் மீள் இணக்கப்பாட்டுக்குமான மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இவர்கள் மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ளனர்.
இவர்களை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் வைத்து மட்டக்களப்பு பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள் வரவேற்றனர்.
இதன்போது மட்டக்களப்பிலுள்ள சர்வமத தலைவர்களின் ஆசியுரை இடம்பெற்றடதுடன் சர்வமத கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தென்னிலங்கையிலிருந்து விஜயம் செய்துள்ள சர்வமத தலைவர்களில் பௌத்த, இந்து, கிறிஸ்த்தவ மற்றும் இஸ்லாமிய மதத்தலைவர்கள் அடங்குகின்றனர்.
நாளை இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் செல்லவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago