2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

இளைஞர் குழுவினருக்கு சிவில் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வு

Super User   / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சிவில் பாதுகாப்புக் குழுவின் இளைஞர் குழுவினருக்கு சிவில் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படத்தும் நோக்கிலான ஒன்றுகூடல் இன்று ஓட்டமாவடி பிரதேச சபைக்கட்டிடத்தில் இடம்பெற்றது.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ.இமானுல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்ன, வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டப்ள்யூ.ஏ.ஜகத் விஸாந்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--