Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 13 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத் உள்நாட்டு வர்த்தக கூட்டுறவு பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டதையடுத்து, முதற்தடவையாக இன்று மாலை அவரது சொந்த ஊரான ஏறாவூருக்கு விஜயம் செய்தார்.
இதன்போது, ஏறாவூர் நகர பிரதேசசபைக்கு முன்பாக பிரதேசசபையின் தலைவர் கபூர், அதன் செயலாளர் ஹமீம் ஆகியோரினால் மாலையணிக்கப்பட்டு ஏறாவூர் முதலாம் குறிச்சி ஜும் ஆ பள்ளிவாயல் வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பள்ளிவாசலினுள் ஏறாவூர் ஜம் இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் துஆ பிரார்த்தனையும் கூட்டமும் நடைபெற்றது.
இதில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இஸ்மாயில் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் றம்ழான் உட்பட ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி காத்தான்குடியைச் சேர்ந்த பிரமுகர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago