Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
தடுப்பு முகாம்களிலுள்ள இளைஞர்கள் இப்போது கட்டங்கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகின்றார்கள். அவர்களது விடுதலை விடயத்தில் மிகவும் கரிசினையுடன் செயற்பட்டு வருகிறேன் என மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட ஆயித்தியமலை மகிழவட்டவான் பிரதேசத்திற்கான மின் விநியோகத்திட்டத்திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய அவர்,
நம்பிக்கையை நாம் அரசாங்கத்திற்குக் கொடுக்கின்ற போதுதான் நமக்கான விடயங்களில் அரசாங்கம் அக்கறையுடன் செயற்படும். அதற்கான காலம் இப்போது ஏற்பட்டு வருகிறது. என்னுடைய கோரிக்கையின் அடிப்படையில் முகாம்களில் வாடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் தற்போது கட்டங்கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகிறார்கள்.
அடுத்த வருடத்தில் பிரதேச சபைத்தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதன்போது நம்முடைய அரசாங்கத்தின் பிரதிநிதிகளை தெரிவுசெய்து நம்முடைய பலத்தை வெளிக்காட்டவேண்டும். அப்போதுதான் நமக்கான அபிவிருத்திகளை அதிகமாக பெற்றுக்கொள்ளமுடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் துரிதமாக அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. மட்டக்களப்புக்குள் நுழையும்போது பெரிய நகரொன்றுக்குள் நுழையும் உணர்வு ஏற்படுகின்றது.
அதற்கு காரணம் எமது பிரதேசத்தின் விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட துறைகளை அபிவிருத்திசெய்வதன் மூலம் எமதுமக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதாகும்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய பிரதேசங்களில் 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில இடங்ககளில் மின்சாரம் வழங்கும் வேலைகள் இடம்பெற்றுவருகின்றன.
யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிரதேசங்களின் அபிவிருத்திப்பணிகள் அடுத்த ஆண்டு துரிதப்படுத்தப்படும். இங்கு நீர்பாசன செயற்பாடுகளில் நான் அதிக கவனம் செலுத்திவருகின்றேன்.
நம்முடைய நம்பிக்கைள் செயற்பாடுகள் மூலமும் ஒற்றுமையை கட்டியெழுப்புவதன் மூலமும் நம்முடைய தேசத்தை கட்டியெழுப்பவேண்டும் என அவர் தெரிவித்தார்.
இவ் வைபவத்தில், மீள் குடியேற்ற பிரதி அமைச்சின் இணைப்புச் செயலாளர்களான பொன். ரவீந்திரன், திருமதி ருத்திரமலர் ஞானபாஸ்கரன், மற்றும் பிரதேச அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago