2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

அரச, தனியார் போக்குவரத்து ஊழியரிடையே வாழைச்சேனையில் மோதல்;பயணிகள் சிரமம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

இன்று காலை மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக  வீதியில் சுமார் அரை மணித்தியாலமாக போக்குவரத்து தடை ஏற்பட்டது.

இதனால் பிரயாணிகள் மற்றும் போக்குரத்தில் ஈடுபட்ட வாகனங்களும் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாமல் பெரும் சிரமத்தை எதிர்நோக்கினர். இரு தரப்பினரம் நேர அட்டவணைப்படி போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையினால் இவர்களுக்கிடையில் கடந்த ஒரு மாத காலமாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனால் வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு செல்லும் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.  போட்டி போட்டு முந்தியடித்துக்கொண்டு வாகனங்களை செலுத்துவதனால் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அதேவேளை பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர், ஊழியர்கள், நோயாளிகள், ஏனைய உத்தியோகஸ்தர்கள் வீதியில் நின்று சைகை காட்டினால் ஏற்றாமல் செல்லும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளது. இதுவிடயமாக வாழைச்சேனை பொலிஸில் மோதலில் ஈடுபட்ட இருவரும் முறைப்பாடினை பதிவு செய்தனர்.

 

 

பொலிஸார் சமரசத்திற்கு கொண்டு வந்ததுடன் பிரதேச செயலாளரின் தலமையின் கீழ் தனியார், அரச மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் உள்ளடங்கியதாக குழு ஒன்றை நியமித்து எதிர்வரும் காலங்களில் இது போன்ற பிணக்குகள் ஏற்படாது போக்குவரத்தினை மேற்கொள்ளுமாறு பொலிஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--