Suganthini Ratnam / 2011 ஜனவரி 09 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ள கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பொண்டுகள்சேனை பகுதி மக்களுக்கு உலர் உணவுப் ;பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை அப்பகுதிக்கு விஜயம் செய்த மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் போக்குவரத்து தடைப்பட்டதன் காரணமாக ஒரு கிலோ மீற்றருக்கு மேற்பட்ட தூரம் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர், அம்மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்துகொண்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர்,
கடும் மழையினால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள இம்மக்கள் மிகவும் சிரமமான முறையில் வாழுகின்றனர். இவர்களுக்கான நிவாரணப் பொருட்களை ஒழுங்குபடுத்தியுள்ளோம். எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமைகளில் நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
விவசாயத்தை தொழிலாகக் கொண்டுள்ள இப்பகுதி மக்களின்; 50 வீதமான விவசாய நிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதை நான் நேரடியாக பார்வையிட்டுள்ளேன். இந்த அழிவுகளை ஈடுசெய்வதற்கு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருடன் கலந்துரையாடி நஷ்டஈடு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்றார் அவர்.
இதன்போது மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச் செயலாளர்களான பொன். ரவீந்திரன், ருத்தரமலர் ஞானபாஸ்கரன் ஆகியோரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்வையிட்டனர்.
.jpg)
6 minute ago
17 minute ago
34 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
34 minute ago
40 minute ago