2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

உன்னிச்சைக்குளம் உடைந்துவிட்டதாக கூறப்படுவதில் உண்மையில்லை

Super User   / 2011 ஜனவரி 09 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சைக்குளம் உடைந்துவிட்டதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லையெனவும் அச்செய்தியை பொதுமக்கள் எவரும் நம்ப வேண்டாமெனவும் மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ்.மோகனதாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சைக்குளம் உடைப்பெடுத்து விட்டதாக சிலர் வதந்திகளை பரப்பியுள்ளனர். இதில் எவ்வித உண்மையுமில்லை எனவும் உன்னிச்சைக்குளம் உடையும் அபாயமில்லையெனவும் அவர் தெரிவித்தார்.


'உன்னிச்சைக்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேறிக்கொண்டிருக்கின்றது. இக்குளத்தை எமது அதிகாரிகள் தொடர்ச்சியாக பரிசீலித்து வருவதுடன் மக்கள் வீனாக அச்சம் கொள்ளத்தேவையில்லை' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X