2025 ஜூலை 12, சனிக்கிழமை

பனிச்சங்கேணி பாலத்தை கடக்க முற்பட்ட நால்வரில் ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 10 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்,ஆர்.அனுருத்தன்,ஸரிபா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு (வாகரை )பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணிப் பாலத்தை கடக்க முற்பட்ட நால்வர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாகரைப் பிரதேசசபையில் தனது கடமையை முடித்துவிட்டு வாழைச்சேனையிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பும்போதே, இவர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டார்.

வாகரை, கோறளை வடக்கு பிரதேசசபையில் காவலாளியாக கடமையாற்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான விநாயகம் விமலநாதன் (வயது 39)  என இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .