2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

தொடரும் மழையினால் பாதிப்புகள் தொடர்கின்றன

A.P.Mathan   / 2011 ஜனவரி 10 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக கோரளைத்தெற்கு கிராண் பிரதேச செயளார் பிரிவிலுள்ள திகிலி வெட்டை, பூலாக்காடு, செட்டியர் குடியிருப்பு, ஆலயடி ஓடை பிரதேச மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான தரைவழிப்பாதை துன்டிக்கப்பட்டதினால் அவர்களை கிராண் மகா வித்தியாலயத்திற்கு இடம் நகர்த்தும் சேவையினை இயந்திர படகு மூலம் இராணுவத்தினரும் கடற்படையினரும் கிராமசேவக உத்தியோகஸ்த்தர்களும் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சித்தான்டி, சந்தி வெளி, பிள்ளையாரடி போன்ற இடங்களில் வீதியின் மேலால் நான்கு அடிக்குமேல் வெள்ளம் பாய்வதினால் மட்டக்களப்பு – கொழும்பு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. சித்தாண்டி, வந்தாறுமூலை பிரதேச மக்கள் சித்தாண்டி மத்திய மகா வித்தியாலயத்திலும் முரக்கொட்டாஞ்சேனை மக்கள் அப்பகுதி அ.த.க. பாடசாலையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவு பொது நிறுவனங்களாலோ அரசினாலோ இதுவரை வழங்கப்படவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.

வாகரைப் பிரதேச மக்களுக்கான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை பிரதேச செயலாளர், 233ஆவது படைப்பிரிவு இராணுவத்தினரும் வழங்கி வருகின்றனர். வாழைச்சேனை முஸ்லிம் பிரதேசங்களான காவத்தமுனை, மாஞ்சோலை, மீராவேடை, ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேச மக்கள் வெள்ளத்தினால் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஓட்டமாவடி பாத்திமா மகளிர் மகா வித்தியாலயம், காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயம், பிறைந்துறைச்சேனை சாதுரிய்யா மகளிர் வித்தியாலயம், தியவட்டுவான் அறபா வித்தியாலயம், மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலயம், கேணி நகர் அல் மதீனா வித்தியாலம்  போன்றவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிராண், படுவான்கரைப் பிரதேச மக்களுக்கான உணவு விநியோகம் கிராண் பிரதேச செயளாரினால் உலங்கு வானூர்தி மூலமும் வழங்கப்படுவதுடன் வழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் வானூர்தி மூலம் மட்டக்களப்பு, பொலனறுவை போன்ற வைத்தியசாலைகளுக்கு இடமாற்றப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--