2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

காணாமல் போன மீனவர் கண்டுபிடிப்பு

Super User   / 2011 ஜனவரி 10 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

ஆரையம்பதி பிரதேச வாவியில் நேற்று ஞாயி;ற்றுக்கிழமை தோணி கவிழ்ந்து காணமாற் போன இரண்டு மீனாவர்களில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றய மீனவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையெனவும் பிரதேசத்திலுள்ள மீனவர்கள் தெரிவித்தனர்.

ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள வாவியில் நேற்று அதிகாலை மீன்பிடிக்க  தோனியில் சென்ற ஆரையம்பதி பிரதேசத்தை சேர்ந்த ஆனந்தன் (50) மற்றும் சாம்பு நாதன் நாக ராசா (43) ஆகிய இரண்டு மீனவர்களின் தோனி கவிழ்ந்ததில் இரண்டு மீனவர்களும் காணாமற் போயுள்ளனர்.

இதையடுத்து கடற்படையினரின் உதவியுடன் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தேடிய போது ஆரையம்பதி வாவியில் வைத்து சாம்பு நாதன் நாக ராசா எனும் மீனவர் கண்டுபிடிக்கப்பட்டு ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மற்றய மீனவரான ஆனந்தன் என்பவர் இன்று மாலை வரை கண்டு பிடிக்கப்படவில்லையென பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--