2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென அரசிடம் வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 11 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எந்தவித பாகுபாடின்றி நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக உள்நாட்டு வர்த்தக கூட்டுறவு பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,  ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன


கடந்த பல நாட்களாக கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் அடை மழையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பலரின் வாழ்வாதார தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.


இந்நிலையை கருத்திற்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டுமென அரசாங்கத்திடம் கோரியதாக  பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார் வீடுகள் சேதமடைந்துள்ளமைக்கும் தொழில் பாதிப்புக்களுக்கும்  நஷ்;டஈடு வழங்க வேண்டுமெனவும் அவர் மேலும் கேட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--