2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கபட்ட மட்டு. மாவட்ட மக்களுக்கு ஐ.சி.ஆர்.சி.யின் சுகாதார பொதிகள்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 11 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

வெள்ள அனர்த்தத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கென இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் சுகாதார பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு இப்பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தின் பிரதேச ரீதியாகவுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரிவுகளினூடாக இச்சுகாதார பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

காத்தான்குடி பிரிவிலுள்ள வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கவென  100 சுகாதார பொதிகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி பிரிவின் நிருவாகத்தினரிடம் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் வசந்தராசா வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--