Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜனவரி 12 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களும் இம்முறை வெள்ளப்பெருக்கினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணம்; வழங்கப்பட வேண்டுமென அரசாங்கத்திடம், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட கச்சேரியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடமும் இது குறித்து அவர் கலந்துரையாடினார்.
ஏதாவது அனர்த்தங்கள் ஏற்பட்டால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாத்திரமே நிவாரணங்கள் வழங்கப்படுவது வழமை. அதேபோல் இம்முறை செய்ய முடியாது. அரச உத்தியோகஸ்தர்கள் உட்பட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டுமெனவும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, நிவாரணம் வழங்குவதற்கு முதற்கட்டமாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு 2.5மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது,
இதனைக் கொண்டு முதற்கட்ட நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளது. சமைத்த உணவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஒவ்வொரு பிரதேச செயலாளர்களுக்கும் பணிப்புரை வழங்கப்பட்டிருக்கிறது.
இன்று கச்சேரில் மீண்டுமொரு விசேட கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் இதில் பல சிரேஷ்ட அமைச்சர்கள் பங்குபற்றுவார்களெனவும் தெரிவிக்கப்படுகிறது. இன்று முதல் உலர் உணவுகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago