Super User / 2011 ஜனவரி 12 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் 1220 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளடன், 3452 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக பிரிவில் 512 வீடுகள் முற்றாக அழிந்துள்ளதுடன், 253 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் சிக்குண்டுள்ள மக்களை மீட்க நீர் வழி போக்குவரத்தை ஏற்படுத்த கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்னவின் உதவியுடன் இதுவரை 20 அதிவிசை படகுகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் டொமினிக் ஜோர்ஜ் தெரிவித்தார்.
21 minute ago
1 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
5 hours ago
9 hours ago