Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜனவரி 13 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த மழையால் மாவட்டத்தின் பல பகுதிகள் நீரிழ் மூழ்கியதுடன், காலநிலை சீர்கேடு நிலவியதால் ஹெலிகொப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப்பணிகள் பணிகள் நிறுத்தப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ச்சியாக காற்றுடன் கூடிய மழை பெய்த நிலையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பல பகுதிகளுக்கான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில், பல்வேறு பகுதிகளிலும் கடலை அண்டியுள்ள ஆற்றுப் பகுதியிலிருந்து வெள்ளநீரை வெளியேற்றுவதற்காக கால்வாய்கள் வெட்டப்பட்டு வெள்ளநீர் வெளியேற்றப்பட்டன.
வெள்ளத்தால் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில், நிவாரணப் பொருட்கள் அம்பாறையூடாக அக்கரைப்பற்றுக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு நகருக்கு கொண்டுவரப்பட்டன. முற்றாக போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் இயந்திரப்படகு மூலம் பொருட்களை மட்டக்களப்பு நகரிலிருந்து அனுப்பிவருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
32 minute ago
34 minute ago