2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

முகாம்களில் குழந்தைகள் பால்மா இன்றி பரிதவிப்பு

Kogilavani   / 2011 ஜனவரி 13 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கே.எஸ்.வதனகுமார்)

வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டடுள்ள படுவான்கரை மக்களின் குழந்தைகள் பால்மா இன்றி பரிதவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. முகாம்களில் மாதிரமன்றி வெள்ளத்தினால் சிக்குண்டு உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ள மக்கள் உணவின்ற கஸ்டப்படுவதுடன் தங்களது குழந்தைகள் சிறுவர்களுக்கு பால்மா இன்றியும் உள்ளனர்.

பால்மா இன்றி குழந்தைகள் படும் பட்டினி பரிதாபத்தினை தாங்க முடியாது உள்ளதாக தெரிவித்து பெற்றார் கண்ணீர்மல்கும் பரிதாப நிலை காணப்படுகின்றது. தங்களுக்கு உணவில்லாது விட்டாலும் குழந்தைகளுக்கு பால்மாவினை வழங்குமாறு இந்த மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சகிதம் படுவான்கரை பிரதேசத்தின் வவுணதீவு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு முகாம்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்ட போது அந்த மக்கள் தங்களது குழந்தைகளின் அவலநிலை குறித்து விபரித்துள்ளனர்.

ஆத்துடன் குழந்தைகளுக்கான பால்மாவினை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் நுளம்புதிரி, நுளம்பு வலை போன்றவற்றை வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, படுவான்கரைப் பகுதிமுற்றாக நீரில் மூழ்கியுள்ளதால் அனைத்து போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் கடைகளில் பனடோல் குழிசை கூட இல்லாமல் மக்கள் பரிதவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் பல வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் நோயுற்ற மக்கள் சிகிச்சை பெறமுடியாத நிலையில் உள்ளனர்.

சில பகுதிகளில் வைத்தியர்கள் வைத்திய முகாம் சென்று சிகிச்சை அளித்துள்ளபோதும் எல்லா பகுதிகளுக்கும் இவர்களது சேவை வழங்கப்படாததினால் ஏனைய மக்கள் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். இவர்களுக்கு பனடோல் கூட பெறமுடியாது மிகவும் கஸ்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .