Suganthini Ratnam / 2011 ஜனவரி 14 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவொரு அனர்த்தத்தையும் எதிர்கொள்ளும் வகையில் படையினர் தயார் நிலையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை தொடர்பில் எடுக்கவேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடலொன்று நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு கல்லடி படை தலைமையகத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதி பொடிபேஸ் பெரேரா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மட்டக்களப்பு மாவட்ட தளபதி பிரி;கேடியர் மஹிந்த முதலிஹே ஆகியோர்; கலந்துகொண்டனர்.
அவசர நிலைமை ஏற்படும்போது ஹெலிகொப்டரை எந்தவேளையிலும் பயன்படுத்த தாயாராகவிருப்பதாக கிழக்கு மாகாண இராணுவக்கட்டளைத் தளபதி தெரிவித்ததாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் தெரிவித்தார். அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏதாவது அனர்த்தங்கள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு படையினர் எந்தவேளையிலும் தயாராகவிருப்பதாக தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
.jpg)
49 minute ago
9 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
9 hours ago
05 Nov 2025