2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

கொழும்பு – மட்டு ரயில் பாதை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில்

Super User   / 2011 ஜனவரி 14 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

கொழும்பு – மட்டக்களப்பு ரயில் பாதை தொடர்ந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக புகையிரத திணைக்களம் இன்று அறிவித்தது.

ரயில் பாதையை மூடி நின்ற வெள்ளம் வடிந்து கொண்டிருந்தாலும், பூரணமாக நீர் வடியும் வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என புகையிரத திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு வரையிலான புகையிரத பாதை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை நின்றால் திருத்தங்கைளை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு – மட்டக்களப்பு புகையிர சேவையை மீண்டும் ஆரம்பிப்பது பற்றி இப்போது எதுவும் கூறமுடியாது எனவும் அவர் கூறினார்.

சில இடங்களில் பயன்படுத்த முடியாமலிருந்த பாதைகள் தற்போது பயன்படுத்தக்கூடியதாக உள்ளது என பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

சில புகையிரத சேவைகள் மண்சரிவு காரணமாக தடைப்பட்டிருந்தாலும் தற்போது அந்த சேவைகள் நடத்த முடிகிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்வார முற்பகுதியில் மட்டக்களப்பு பகுதியில் ரயில் பாதையை மூடி 2 ½ அடி வரை வெள்ளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .